வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஸ்பெக்ட்ரம் விசாரணை: முக்கிய குறிப்புகள்

ஸ்பெக்ட்ரம் விசாரணை: முக்கிய குறிப்புகள்
16 மே, 2007: ஆ.ராசா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

25 அக்டோபர், 2007: செல்போன் சேவைக்கான 2 ஜி (இரண்டாம் தலைமுறை) ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ஏலத்தை நடத்த அரசு சட்டம்.

செப்டம்பர்-அக்டோபர், 2008: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது.

15 நவம்பர், 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதிக்கீடட்டில் ஊழல் இருப்பதாக கருதி தொலைத் தொடர்பு அமைச்சகம் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் விசாரணை.

21 அக்டோபர், 2009: 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பதிவு செய்தது.

22 அக்டோபர், 2009: தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை.

17 அக்டோபர், 2010: ஸ்பெக்ட்ரம் ஓதிக்கிட்டில் ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதாக தணிக்கை குழு ஆடிட்டர் ஜெனரல் தொலைத் தொடர்பு அமைச்சகம் மீது புகார்.

நவம்பர், 2010: ஆ.ராசாவை பதவி விலக்கமாறு எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்.

14 நவம்பர், 2010: ஆ.ராசா ராஜினாமா.

15 நவம்பர், 2010: மனித வள மேம்பாட்ட அமைச்சர் கபில் சிபலுக்கு தொலைத் தொடர்புத்துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

நவம்பர், 2010: நாடாளுமன்றம் கூட்டுக்குழு குழு விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முழுவதும் முடக்கியது.

13 டிசம்பர், 2010: ஸ்பெக்ட்ரம் முறை கேட்டை கண்டுபிடித்து ஆவணங்களை சமர்பிக்க முன்னால் நீதிபதி சிவ்ராஜ் பாட்டீல் நியமனம்.

24,25 டிசம்பர், 2010: ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை.

31 ஜனவரி, 2011: மூன்றாவது முறையாக ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை சிவ்ராஜ் பாட்டீல் தனது அறிக்கை சமர்பித்தார்.

2 பிப்ரவரி, 2011: ஆ.ராசா தொலைத் தொடர்பு செயலாளர்கள் சித்தார்த்தா பெகுரியா, ஆர்.கே. சந்தோலி ஆகியோர் கைது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக