வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஆ.ராசா - தில்லி திகார் 14 நாட்கள் சிறை

        புதுதில்லி, பிப்.17:  முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும், பின்னர் 14-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டத
சிபிஐ காவல் முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால் அவரை மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். மேலும் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை அவருக்கு அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக