சனி, 12 பிப்ரவரி, 2011

2ஜி முறைகேடு: ராசா-பால்வா தொடர்பு உறுதி?


2ஜி முறைகேடு: ராசா-பால்வா தொடர்பு உறுதி?
புதுடெல்லி, பிப்.12,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் தனக்கு தொடர்பு இருந்ததை, டிபி ரியாலிட்டி குழுமத்தின் தலைவர் பால்வா ஏற்கெனவே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிஐக்கு பால்வா அனுப்பிய 2010 டிசம்பர் 22 தேதியிட்ட கடிதத்தில் இதுகுறித்த விவரம் இடம்பெற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கடிதத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தில் சாதிக் பாட்சாவை சந்தித்ததாக பால்வா குறிப்பிட்டுள்ளார். '
அந்தக் காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் அமைச்சராக ராசா பொறுப்பு வகிந்திருந்தது இங்கே கவனத்துக்குரியது.
ராசாவுக்கு மிக நெருக்கமான உதவியாளரான சாதிக் பாட்சா, தென் இந்தியாவில் பால்வாவின் டிபி ரியாலிட்டி குழுமம் ரியல் எஸ்டேட் துறையில் தடம்பதிக்க உறுதுணையாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆ.ராசாவையும், பால்வாவையும் கைது செய்து கஸ்டடியில் சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக