வெள்ளி, 11 மார்ச், 2011

தி.மு.க., கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் விலகல்

சென்னை: புரட்சி பாரதம் கட்சி, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விட்டதாகவும்,தேர்தலில் 63 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்கள் காமராஜ், சிவஞானம், மாநில செயலர் வின்சென்ட் ஆகி÷ யார் சென்னையில், நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டு பார்லி., தேர்தலில் தி.மு.க.,வுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார். ஏழு ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தோம். எந்த பிரச்னையும் ஏற்படாமல் நடந்து கொண்டோம்